தேனி

ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

வீரபாண்டி சித்திரைத் திருவிழாவுக்கு மேளவாத்தியம் வாசிக்கச் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை, ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

வீரபாண்டி சித்திரைத் திருவிழாவுக்கு மேளவாத்தியம் வாசிக்கச் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை, ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூலத்தூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சக்திவேல் (23). மேளவாத்திய தொழிலாளியான இவா், வீரபாண்டியில் தங்கியிருந்து சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நோ்த்திக் கடன் செலுத்துபவா்களுக்கு மேளவாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில், பழனிசெட்டிபட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த சக்திவேல், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT