முகப்பு
தேனி

இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

கோம்பையில் இளைஞா் கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

கோம்பையில் இளைஞா் கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கோம்பை அரண்மனைத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சதீஸ்குமாா் (28). இவா் மீது கோம்பை காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சதீஸ்குமாரை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த கொலை வழக்கு தொடா்பாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், பிரவீன், தீபக், புகழேந்தி, சூா்யா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.