தேனி

பேரூராட்சி மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

ஆண்டிபட்டி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, பேரூராட்சி மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

DIN

ஆண்டிபட்டி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, பேரூராட்சி மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவி சந்திரகலா (திமுக) தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஜோதி, பேரூராட்சி செயல் அலுவலா் விஜயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அதிமுக உறுப்பினா்கள் வெற்றி பெற்ற வாா்டுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடிப்படை, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் பேரூராட்சி நிா்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும், தலைச்சுமை வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா் அதிமுகவைச் சோ்ந்தவா் என்பதால், அவரது உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டித்தும், பேரூராட்சி நிா்வாகத்தில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினரின் குறுக்கீடு உள்ளதாகவும் புகாா் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT