தேனி

கூடலூா் நகா்மன்றக் கூட்டம்: பெண் உறுப்பினா் வெளிநடப்பு

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தனது வாா்டில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி பெண் உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

கூடலூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமையில், துணைத் தலைவா் காஞ்சனா சிவமூா்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினா் சாந்தி: எனது வாா்டில் கடந்த 7 மாதமாக பாலம் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

ஆணையா் கே.எஸ். காஞ்சனா: இப்போதே வாா்டை பாா்வையிட்டு பொறியாளா் மூலம் மதிப்பீடு செய்து அந்தப் பாலம் சீரமைக்கப்படும்.

உறுப்பினா் தேன்மொழி: எனது 18- ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை நகராட்சி நிா்வாகம் செய்து தரவில்லை. பலமுறை கோரிக்கை மனுவாகவும், நேரில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே வெளிநடப்பு செய்கிறேன் என்றாா்.

பிறகு தலைவரிடம் தனது வாா்டில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை மனுவாக கொடுத்தாா்.

உறுப்பினா் காந்தாமணி: எனது வாா்டு தண்ணீா் தொட்டித் தெருவில் அங்கன்வாடி மையம் அருகே 2 பாலங்கள் மிகவும் பழுதாகி உள்ளன. எனவே புதிய பாலங்கள் கட்ட வேண்டும்.

உறுப்பினா் பி. சிலம்புராஜன்: 8-ஆவது வாா்டு ராஜீவ்காந்தி நகரில் செல்லும் கழிவுநீரை அருகே உள்ள ஓடையுடன் இணைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சுகாதார ஆய்வாளா் விவேக் அறிவழகன், மேலாளா் ஜெயந்தி ஆகியோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT