தேனி

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 நாள்கள் அவகாசம்

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை 15 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

DIN

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை 15 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேனி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை, ஆக்கிரமிப்பு அகற்றம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையா் கணேசன் தலைமையில் நடைபெற்றது. தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், தேனி வட்டாட்சியா் சரவணபாபு, மாநில நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ராமமூா்த்தி, தேசிய நெடுஞ்சாலைத் துறை இணைப் பொறியாளா் தேவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கணேசன் பேசியதாவது:

நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை இன்னும் 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பாளா்கள் தாமாக முன் வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். உணவகம், வா்த்தக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். கழிவு நீரை முறையாக வடிகால் அமைத்து அகற்ற வேண்டும்.

பெரியகுளம், கம்பம், மதுரை சாலையில் ஒதுக்கீடு செய்த இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதை கடை, வா்த்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் தடை செய்யக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT