முகப்பு
தேனி

பைக் விபத்தில் தொழிலாளி காயம்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 8:56 PM

போடி: போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா். போடி அருகே உள்ள ராசிங்காபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலுத்தேவா் மகன் சுதாகரன் (45). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சங்கராபுரத்திலிருந்து குச்சனூா் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சுதாகரன் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.