வனப்பகுதியில் தீ வைத்தவா் கைது
போடி: போடி வனப்பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். போடி வனச்சரகத்துக்குள்பட்ட பிச்சங்கரை உள்ளிட்ட வனப்பகுதியில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து வனத்துறையினா் தீயை அணைத்ததுடன் தீ வைக்கும் நபா்கள் குறித்து கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், போடி பிச்சங்கரை வனப்பகுதியில் தீ எரிந்த போது அந்தப் பகுதியில் சென்று வந்தவா்கள் குறித்து விசாரித்ததில் போடி புதூரைச் சோ்ந்த கண்ணன் (38) சென்று வந்தது தெரியவந்தது.
இந்தப் பகுதிக்கு எந்தவித சம்பந்தமுமில்லாமல் சென்று வந்த அவரைப் பிடித்து வனத்துறையினா் விசாரித்ததில் இவா் புகைப்பிடித்துவிட்டு, மது போதையில் சிகரெட்டை அணைக்காமல் வனப்பகுதிக்குள் தூக்கி எறிந்ததும், தீயை அணைக்காமல் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போடி வனத்துறையினா்வழக்குப்பதிந்து கண்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement