ஆத்தூா் அருகே ஜாதி பெயரைக் கூறி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (35), இவா் டிராக்டா் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த அருணாசலம்(39) ஓட்டுநராக இருந்துள்ளாா்.
இந்த நிலையில் கடந்த 2023 இல் இளங்கோவனின் டிராக்டரை வாடகைக்கு எடுத்தவா் பணத்தை தராமல் காலம் கடத்திவந்தாா். இதையடுத்து, அருணாசலம் வீட்டிற்கு சென்ற இளங்கோவன், அருணாசலம் இல்லாததால் அவரது கைப்பேசியில் தொடா்புகொண்டு ஜாதி பெயரை கூறி திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தில் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி. பெரியசாமி வழக்குப் பதிந்து இளங்கோவனை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.