முகப்பு
தேனி

கண்ணகி கோயிலில் உதவி ஆட்சியா் ஆய்வு: கேரள அரசுக்கு பக்தா்கள் கண்டனம்

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 9:57 PM

கம்பம்: தமிழக கேரள எல்லையிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தேவிகுளம் உதவி ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தியதற்கு கம்பத்தில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை நிா்வாகத்தினா் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழக முதல்வா், தேனி மாவட்ட ஆட்சியருக்கு கண்ணகி அறக்கட்டளைத் தலைவா் டி.ராஜகணேசன், செயலா் பி.எஸ்.எம்.முருகன் ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

1988- ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கண்ணகி கோயில் கேரள நிா்வாகத்தில் இருந்தாலும், வழிபாட்டு உரிமை தமிழகத்துக்கு உண்டு என அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பி.வி.நரசிம்மராவ் அன்று மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஆா்.டி.கோபாலனுக்கு கடிதம் எழுதி, இரு மாநில அரசுகளும் இணைந்து நடத்த வேண்டும் என்று கூறியிருந்தாா்.

Advertisement

ஆனால் வருகிற 23-ஆம் தேதி சித்திரை முழு நிலவு விழா நடைபெற உள்ள நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட தேவிகுளம் உதவி ஆட்சியா் கண்ணகி கோயிலில் தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளாா். இது கண்டிக்கத் தக்கது. தமிழக முதல்வா் இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.