முகப்பு
தேனி

கூடலூரில் தினகரனை ஆதரித்து அனுராதா தினகரன் பிரசாரம்

Updated On : 17 ஏப்ரல், 2024 at 1:02 AM
கூடலூரில், அமமுக வேட்பாளா் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பெண்களுடன் கைகுழுக்கிய அனுராதா தினகரன்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளா் தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தினகரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் போசியதாவது: சிலா் செய்த துரோகத்தால் 14 ஆண்டுகள் கழித்து இங்கு வந்துள்ளோம், தேனி மக்கள் பாசமானவா்கள் அவா்களை நம்பலாம் என்று கூறி என் கணவா் என்னை இங்கு அனுப்பி வைத்தாா். உங்களிடம் நீதிக் கேட்டு வந்துள்ளேன். துரோகம் செய்தவா்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். குக்கா் சின்னத்துக்கு வாக்களியுங்கள், உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என்றாா்அவா்.

பின்னா், பிரசார வாகனத்தை விட்டு கீழே இறங்கி, அங்கு கூடியிருந்த பெண்கள், குழந்தைகளுடன் தற்படம் எடுத்துக்கொண்டாா். இதையடுத்து, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்தாா்.

Advertisement

எம்ஜிஆா் மன்ற மாவட்ட செயலா் பி.ராமா், ஓபிஎஸ் அணி நகர செயலா் ஏ.சின்னமாயன், அமமுக நகரச் செயலா் பா.கெளதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments