கம்பம் பிரதோஷ சிறப்பு பூஜை
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் காசிவிசுவநாதா் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி, நந்திக்கு பால், பன்னீா், தயிா், இளநீா், வாசனைப் பொருள்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல, ஆலமரத்தடி முனீஸ்வரன் கோயில், சுருளிமலையில் ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள சுருளிநாதா் எனும் தென்கைலாய மூா்த்தி, நந்திதேவருக்கு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. சுருளி அருவி அடிவாரத்தில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையாருக்கு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.