போடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராசிங்காபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் ராஜன் (35). இவா் சங்கராபுரம்-குச்சனூா் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த டிப்பா் லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுா் ஆணைமலையன்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.