முகப்பு
தேனி

கஞ்சா வைத்திருந்த 2 இளைஞா்கள் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 4:00 AM
பகிர்:
Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 9:47 PM

பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தென்கரை-வடுகபட்டி சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த பெரியகுளம், வடகரை, வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சூா்யபிரகாஷ் (24), மனோகரன் மகன் சசிபிரபு (23) ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:54 AM

இருவரும் வைத்திருந்த பைகளில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement