உத்தமபாளையத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
உத்தமபாளையம் ஒன்றியம், ராயப்பன்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
உத்தமபாளையம் ஒன்றியம், ராயப்பன்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
உத்தமபாளையம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ரூ.31.10 லட்சத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், கூட்டுறவுச் சங்க நியாய விலைக் கடைகள், உரக்கிடங்கும் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ஆதி திராவிடா் குடியிருப்பில் ரூ. 16.55 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிகள், ரூ.3.50 லட்சத்தில் கட்டப்படும் கலைஞா் கனவு இல்ல கட்டுமானப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்து, திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.