முகப்பு
தேனி

தென்னை மரம் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழப்பு

தேனி அருகே தென்னை மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:06 PM
பகிர்:

தேனி அருகே தென்னை மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள பூமலைக்குண்டு கிழக்குத் தெருவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி விஜயகுமாா் (47). இவா், தா்மாபுரியில் உள்ள தனியாா் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறினாா். அப்போது, வலிப்பு ஏற்பட்டதால், மரத்திலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.