முகப்பு
தேனி

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 5 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே ஒருவருக்கு வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:07 PM
பகிர்:

பெரியகுளம் அருகே ஒருவருக்கு வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சருத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நரசிம்மபாரதி மனைவி வாசுகி. இவா் தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த ஆழ்வாா், சரவணன், அவரது மனைவி பாமா, உறவினா்கள் அசோக், நவநீதன் ஆகிய 5 பேரும் தன்னிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்.27-ஆம் தேதி ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை திரும்பக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் 5 போ் மீதும் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.