கம்பத்தில் கடையடைப்பு 
தேனி

கம்பத்தில் 2-வது நாளாக கடையடைப்பு!

கம்பத்தில் பேருந்து நிலைய வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பேருந்து நிலைய வியாபாரிகள் கடையடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பம் நகராட்சி பேருந்து நிலைய கடை வியாபாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த மறுப்பதை கண்டித்தும் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பேருந்து நிலைய கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில்குமார் கூறும்போது, நகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது, ஆனால் பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளை மாற்றி அமைத்து கொடுத்தால்தான் கடைகளை திறப்போம் அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT