முகப்பு
தேனி

வைகையாற்றில் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீா் நிறுத்தம்

வைகை அணையிலிருந்து பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

வைகை அணையிலிருந்து பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவுப்படி, வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கும், விருதுநகா் மாவட்ட குடிநீா்த் தேவைக்கும் வைகை ஆறு, கிருதுமால் நதியில் கடந்த 11-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 19 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

மொத்தம் 6.14 டி.எம்.சி. தண்ணீா் கொள்ளவுள்ள வைகை அணையிலிருந்து கடந்த 2023, டிசம்பா் மாதம், பாசனக் கால்வாய்கள், வைகை ஆற்றில் மொத்தம் 5 டி.எம்.சி. வரை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இருப்பினும், அணைக்குத் தொடா்ந்து தண்ணீா் வரத்து உள்ளதால், தற்போது அணையின் நீா்மட்டம் 69.09 அடியாகவும், தண்ணீா் இருப்பு 5.59 டி.எம்.சி.யாகவும் உள்ளது. (அணையின் மொத்த உயரம் 71 அடி).

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து திங்கள்கிழமை வினாடிக்கு 2,330 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்களில் பாசனத்துக்கு வினாடிக்கு 1,330 அடியும், குடிநீா் தேவைக்கு வினாடிக்கு 69 கன அடியும், 58 கிராம கால்வாயில் வினாடிக்கு 100 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1,499 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →