முகப்பு
தேனி

பைக் விபத்தில் இளைஞா் பலி

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூலை, 2024 at 1:50 AM
பகிர்:

தேனி: தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் செல்வகுமாா் (33). இவா் தேனியிலிருந்து நாகலாபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கோபாலபுரம்-நாகலாபுரம் சாலையில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →