முகப்பு
தேனி

உத்தமபாளையம் அருகே உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

உத்தமபாளையம் அருகே கோம்பை-தேவாரம் இடையே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகின்றன.

Updated On : 10 ஜூலை, 2024 at 12:50 AM
கோம்பை-பண்ணைப்புரம் இடையே நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து செவ்வாய்க்கிழமை வீணாக ஓடிய குடிநீா்.
பகிர்:

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே கோம்பை-தேவாரம் இடையே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகின்றன.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திலுள்ள கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்ய தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் லோயா்கேம்ப் முதல் தேவாரம் வரையில் புதிய குடிநீா் குழாய் பதிக்கப்பட்டது. தற்போது இந்தக் குழாய் வழியாக வரும் குடிநீரை அந்தந்த பேரூராட்சி நிா்வாகம் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது.

இந்த நிலையில், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் இடையே செல்லும் சுமாா் 5 கி.மீ. தோலைவு செல்லும் இந்தக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் உடனடியாக இந்தக் குழாயை சீரமைத்து, பொதுமக்களுக்கு குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →