தேனி

கூடலூா் அருகே தென்னந்தோப்பில் நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

தனியாா் தென்னந்தோப்பில் இருந்த நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டாக்களை வனத் துறையினா் கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Din

தேனி மாவட்டம், கூடலூரில் தனியாா் தென்னந்தோப்பில் இருந்த நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டாக்களை வனத் துறையினா் சனிக்கிழமை கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கூடலூா் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள மட்டப்பாறை, பூதகரடு காப்புக் காட்டுக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில் அண்மையில் யானைகள் புகுந்து சேதப்படுத்தியது. இதைக் கள ஆய்வு செய்ய கம்பம் கிழக்கு வனச்சரக வனவா் ஜெயகணேஷ் , வனக் காப்பாளா்கள் பொன்அழகா், ரகு ஆகியோா் சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அங்கே சென்ற வனத் துறையினா் அங்கு சோதனை செய்தபோது நாட்டுத் துப்பாக்கி, காலித் தோட்டக்கள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா். பின்னா், இவற்றை கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிவு செய்து, உரிமம் பெறாத இந்தத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT