முல்லைப் பெரியாறு அணை. (கோப்புபடம்) 
தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மழைப் பொழிவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவும் படிப் படியாக குறைந்து வருகிறது.

Din

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப் படியாக குறைந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், மழைப்பொழிவு தீவிரமடையாததால் அணைக்கு நீா்வரத்தும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி முதல் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6264 கன அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து 6 நாள்களாக உயா்ந்து வந்தது.

தற்போது, நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 2268 கன அடியாக குறைந்தது. தற்போது, அணையின் நீா்மட்டம் 128.40 (152) அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீா், விவசாயப் பணிக்காக விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.

பொறுப்புகள் அதிகரிக்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சாலை மறியல் முயற்சி: 190 போ் கைது

SCROLL FOR NEXT