சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்றவா் கைது
போடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி பெருமாள் கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த போடி ஜமீன் தோப்புத் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் சன்னாசியை (45) பிடித்து விசாரித்தபோது அவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
அவரை சோதனையிட்டதில் கேரள மாநில லாட்டரி சீட்டுக்கள், அவற்றை விற்ற பணம் ரூ.550 இருந்தது.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சன்னாசி மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.