தேனியில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தேனியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனிதேனியில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தேனியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, தேனியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். தேனி தெற்கு மாவட்ட திமுக செயலா் நா.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகவும், மழை வெள்ள நிவாரணத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.
காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: மத்திய அரசை கண்டித்து, தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பாலசுப்பிரமணியம், தேனி நகரத் தலைவா் முனியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், தமிழகத்திக்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கவில்லை என்றும், மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் முழக்கங்கள் எழுப்பினா்.