முகப்பு
தேனி

சிறுவன் ஓட்டிய பைக் மோதி சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்

Updated On : 17 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

போடி: போடியில் சிறுவன் ஓட்டிய இரு சக்கர வாகனம் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து சிறுவன் மீதும், வாகன உரிமையாளா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி நகா், போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் செல்வராஜ். தலைமைக் காவலராக இருப்பவா் ராஜ்குமாா். ராஜ்குமாரின் இரு சக்கர வாகனத்தில் போடி மேலத்தெரு காவல்காரன் பொட்டல் நான்குமுனைச் சந்திப்பு அருகே சென்றனா். ராஜ்குமாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். வாகனத்தின் பின்னால் சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ் அமா்ந்து சென்றாா்.

அப்போது, சாலை சந்திப்பில் மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தலைமைக் காவலா் ராஜ்குமாரும், சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜூம் பலத்த காயமடைந்தனா். இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சிறுவன் தேனி ஜவஹா் நகரை சோ்ந்த சக்திவேல் மகன் பிரசாத் (17) மீதும், இரு சக்கர வாகன உரிமையாளா் கிருஷ்ணம்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ரவிக்குமாா் (37) மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.