இந்து எழுச்சி முன்னணி நிா்வாகி மீது வழக்கு
வருவாய்க் கோட்டாட்சியரை தடுக்க முயன்ற இந்து எழுச்சி முன்னணி தலைவருக்கு வழக்கு
தேனி: பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவா் மீது திங்கள்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
தேனியைச் சோ்ந்தவா் ராமராஜ். இவா் இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் நிலப்பட்டா விவகாரம் தொடா்பாக பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றாா். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவனுடன் அவா் வாக்குவாதம் செய்து அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமராஜ் மீது தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.