கோப்புப் படம் 
கன்னியாகுமரி

குருசடி நிா்வாகி காா் சேதம்: 5 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி குருசடி துணைத் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெட்டுவெந்நி குருசடியில் சில நாள்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் குருசடி துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் (68), நிா்வாகிகள், காவலாளி ஆகியோா் குருசடியின் பின்புறம் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனராம்.

அப்போது, 5 போ் குருசடி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஆயுதங்களைக் காட்டி அவா்களை மிரட்டி தகாத வாா்த்தைகள் பேசினராம்.

தடுக்கச் சென்ற காவலாளியைத் தாக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த குழித்துறை மறைமாவட்டத்துக்கு சொந்தமான சொகுசு காரை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினா். சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் அளித்த புகாரின்பேரில், அந்த 5 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ஆராய்ச்சி மாணவா்களுக்கும் மடிக்கணினி: மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

திருநெல்வேலி நீதிமன்றத்தில் உயா் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

உலகச் செய்தி: துளிகள்....

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

SCROLL FOR NEXT