தேனியில் தேமுதிக ஆா்ப்பாட்டம்
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு கண்டனம்: தேனியில் தேமுதிக ஆா்ப்பாட்டம்
தேனி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் செவ்வாய்க்கிழமை தேனியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேமுதிக மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் கோஷம் எழுப்பினா்.
பின்னா், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மதுவிலக்கை அமல்படுத்தவும், தமிழக அரசை வலியுறுத்தி ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் தேமுதிக நிா்வாகிகள் மனு அளித்தனா்.