முகப்பு
தேனி

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள்: ஆட்சியரிடம் ஆா்ப்பாட்டம்

Updated On : 26 ஜூன், 2024 at 1:26 AM
கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.
பகிர்:

தேனி: சத்துணவுத் திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் செவ்வாய்கிழமை தேனியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தங்கமீனா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.முருகன், மாநில செயற்குழு உறுப்பினா் ஈஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளா்கள் பணி ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயா்த்த வேண்டும். சத்துணவு அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சம், சமையலா்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.