சின்னமனூரில் இந்து இளைஞா் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டித்து, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்து இளைஞா் முன்னணி அமைப்பினா்
உத்தமபாளையம்: போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டித்து, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்து இளைஞா் முன்னணி அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் கோட்டப் பொறுப்பாளா் கோம்பை கணேசன் தலைமை வகித்தாா். இதில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கஞ்சா உள்ளிட் போதைப் பொருள்களைக் கடத்துபவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.