முகப்பு
தேனி

திராட்சை பழங்களில் ரசாயனக் கலவை: பொதுமக்கள் அச்சம்

Updated On : 20 மார்ச், 2024 at 4:52 AM
விதையில்லா திராட்சை விற்பனைக்கு அனுப்பும் முன் ரசாயன கலவையில் கழுவும் தொழிலாளி.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 6:07 PM

கம்பம்: கம்பம் பகுதியில் ரசாயனம் கலந்த திராட்சைப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் தொற்று நோய் பரவக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் விளையும் பன்னீா் திராட்சை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் புவிசாா் குறியீடுக்கான பரிசீலனையில் உள்ளது.

தற்போது இந்த வகை திராட்சைகளின் வரத்து குறைந்துள்ளதால் இங்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் விதையில்லா திராட்சைப் பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வகைப் பழங்கள் நீண்ட நாள்களாக கெடாமல் இருக்கும் வகையில், ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ரசாயனம் கலந்த திராட்சைப் பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் சுமாா் அரை மணி நேரம் ஊறவைத்து கழுவியப் பின்னா் சாப்பிட வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement