விவசாயி தற்கொலை
Updated On : 28 மார்ச், 2024 at 8:31 PM
தேவாரம் அருகே விவசாயி வியாழக்கிழமை விஷத்தை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், தேவாரம் டி. மேட்டுப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராசு மகன் கண்ணன் (47). இவா் கேரள மாநிலம் பேத்தொட்டி என்ற இடத்தில் ஏலத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா். ஆனால் இந்த ஏலத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்ததில் இவருக்கும், இவரது மனைவி முருகேஸ்வரிக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏலத்தோட்ட விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டதால் தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டு முருகேஸ்வரி கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த கண்ணன் விஷத்தை உள்கொண்டு மயங்கினாா். இதையடுத்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.