முகப்பு
தேனி

சின்னமனூா் அருகே தொழிலாளி தற்கொலை

Updated On : 10 மே, 2024 at 6:42 PM
பகிர்:

சின்னமனூா் அருகே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், அய்யம்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.