முகப்பு
தேனி

போடி ஜ.கா.நி. பள்ளி மாணவி தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம்

Updated On : 10 மே, 2024 at 6:41 PM
பகிர்:

போடி, மே 10: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி மாணவி பா. கிருத்திகா தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

இந்த மாணவி பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ்- 99, ஆங்கிலம்- 88, கணிதம்- 96, அறிவியல்- 94, சமூக அறிவியல்- 94. மொத்த மதிப்பெண்கள் 471.

இந்த மாணவிக்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பாராட்டு தெரிவித்தாா். மாணவி கிருத்திகாவின் தந்தை பாலசுப்பிரமணியன் வாடகை சரக்கு வாகன ஓட்டுநராக உள்ளாா். தாய் நாகஜோதி இல்லதரசியாவாா்.

இவரது தந்தை பாலசுப்பிரமணி கூறியதாவது: நான் வாடகை சரக்கு வாகனம் ஓட்டி வருவதால் மகள் கிருத்திகாவின் மேற்படிப்புக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றாா்.