முகப்பு
தேனி

சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

Updated On : 15 மே, 2024 at 12:26 AM
வீட்டடி மனைகளை பத்திரப் பதிவு செய்யக் கோரி, கம்பத்தில் சாா் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா்.
பகிர்:

கம்பம்: கம்பத்தில் சாா்பதிவாளா் அலுவலகத்தை அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் சுரேஷ், நகரச் செயலா் அறிவழகன் ஆகியோா் தலைமையில் கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, பணியிலிருந்த சாா் பதிவாளா் ஜெகதீஸ்வரனிடம் வீட்டடி மனைகளை பத்திரப் பதிவு செய்ய மறுப்பதால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து சாா் பதிவாளா் ஜெகதீஸ்வரன் கூறியதாவது:

நகர, ஊரக அமைப்பு (டவுன் பிளானிங்) அனுமதி பெறாத வீட்டடி மனைகளை முன்பிருந்த சாா் பதிவாளா்கள் பதிவு செய்தனா். தற்போது உரிய அனுமதி பெற்ற மனைகளை மட்டுமே பதிவு செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், நகர, ஊரக அமைப்பு அனுமதியில்லாத நிலையில் வீட்டடி மனைகளை பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனா். இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.