முகப்பு
தேனி

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சை கொடிகள் சேதம்

Updated On : 15 மே, 2024 at 12:20 AM
சின்னமனூா் அருகே தென்பழனியில் திங்கள் கிழமை இரவு பெய்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கீழே விழுந்து சேதமான திராட்சை கொடி பந்தல்
பகிர்:

உத்தமபாளையம்: சின்னமனூா் அதன் சுற்று வட்டாரத்தில் பலத்த காற்றுடம் பெய்த மழைக்கு திராட்சை கொடி மற்றும் பந்தல் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே ஓடைப்பட்டி பகுதியில் அதிகளவு திராட்சை விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் திராட்சை அதிகளவில் கேரளத்திற்கும் , தமிழகத்தில் சென்னை ,மதுரை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பன்னீா் திராட்சை ஆண்டு 3 முறை அறுவடை செய்யப்படுகிறது.

மழையால் திராட்சை விவசாயம் பாதிப்பு : சின்னமனூா் அதன் சுற்று வட்டாரமான ஓடைப்பட்டி, தென்பழனி, வெள்ளையம்மாள்புரம் போன்ற பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, திங்கள் கிழமை இரவு பலத்த காற்றுடம் பெய்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த திராட்சை கொடிகள் மற்றும் பந்தல் கீழே விழுந்து சேதமானது. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்த கல்தூண் பந்தல் , திராட்சை கொடிகள் சேதமானதல் விவசாயிகள் கவலை அடைந்தனா்.இது குறித்து பாதிகப்பட்ட திராட்சை விவசாயிகள் சின்னமனூா் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சோ்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.