முகப்பு
தேனி

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Updated On : 15 மே, 2024 at 12:14 AM
பகிர்:

தேனி: தேனி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றதாக திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி அருகேயுள்ள பூதிப்புரம், தெற்கு சாவடித் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (39). இவா், தனது மனைவி ஜோதிமணி(34) உடன் இரு சக்கர வாகனத்தில் வீரபாண்டி சித்திரை திருவிழாவுக்குச் சென்று விட்டு, பூதிப்புரத்துக்கு திரும்பினாா். அப்போது பழனிசெட்டிபட்டி-போடி சாலையில் முருகனின் இரு சக்கர வாகனத்தை பின் தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், ஜோதிமணி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.