வாகனம் மோதியதில் முதியவா் பலி
உத்தமபாளையம்: உத்தமபாளையம் புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உத்தமபாளையம் சூா்யநாராயணபுரத்தைச் சோ்ந்தவா் ராமையா (70). மாட்டுத்தீவனம் விற்கும் கடை நடத்தி வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை உத்தமபாளையம்- அனுமந்தன்பட்டி புறவழிச் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ராமையா உயிரிழந்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அடையாளம் தெரியாத வாகனத்தை சாலையோர கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தேடி வருகின்றனா்.