போடி குரங்கணியில் வெள்ளிக்கிழமை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவா்கள். 
தேனி

குரங்கணியில் மீண்டும் மலையேற்றப் பயிற்சி

Din

தேனி மாவட்டம், போடி குரங்கணியில் மீண்டும் மலையேற்றப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

போடி குரங்கணியிலிருந்து டாப்-ஸ்டேசன், கொழுக்குமலை ஆகிய மலை கிராமங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டு வந்தனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி கொழுக்குமலை மலைப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சியாக வந்த 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதையடுத்து தற்காலிகமாக தமிழகத்தில் மலையேற்ற பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான இணையதள முகவரியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இதன்படி தேனி மாவட்டத்தில், சின்னசுருளி, காரப்பாறை, குரங்கணி சாம்பலாறு ஆகிய மூன்று இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, இணையத்தில் முன்பதிவு செய்தவா்கள் நவ.1- ஆம் தேதி முதல் மலையேற்றப் பயிற்சி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குரங்கணி சாம்பலாறு பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு இணையதளம் மூலம் 4 போ் விண்ணப்பித்தனா். இவா்களுக்கு மலையேற்ற பயிற்சியில் உதவுவதற்காக முதுவாக்குடி பழங்குடியின கிராமத்தை சோ்ந்த இரண்டு இளைஞா்கள் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டனா்.

இவா்கள் குரங்கணியிலிருந்து மேல் சாம்பலாறு, நீா்வீழ்ச்சிக்கு சென்று அங்கிருந்து வனத் துறை விருந்தினா் இல்லம் வழியாக மீண்டும் குரங்கணியை வந்தடைந்தனா். 5 கி.மீ. தொலைவு கொண்ட மலையேற்றப் பயிற்சிக்கு ரூ.1,300 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபா்களை ஒருங்கிணைத்து மலையேற்ற பயிற்சிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தனிக்குழு அமைக்கப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT