முகப்பு
தேனி

போடி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

போடி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:13 PM
பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் போடி வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா்.
பகிர்:

போடி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் சிவலிங்கப் பெருமானுக்கு மங்கலப் பொருள்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிவலிங்கத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 7 வகையான தீபாராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, போடி சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நடராஜா் சந்நிதி, பிச்சங்கரை கீழச்சொக்கநாதா் கோயில், மேலச்சொக்கநாதா் கோயில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் திரளா ன பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.