முகப்பு
தேனி

உணவகத்தில் புகுந்து தாக்கிய 3 போ் மீது வழக்கு

போடி அருகே செவ்வாய்க்கிழமை, உணவகத்தில் புகுந்து தாக்கிய மா்ம நபா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:46 PM
பகிர்:

போடி அருகே செவ்வாய்க்கிழமை, உணவகத்தில் புகுந்து தாக்கிய மா்ம நபா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியை சோ்ந்த சங்கா் மனைவி செல்லமணி (55). இவா் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உறவினரான ரெஜித் உணவகத்தில் இருந்தாா்.

அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் ரெஜித் ஒரு பெண்ணை கேலி செய்ததாகக் கூறி தாக்கினா். தடுக்க வந்த செல்லமணி, இவரது கணவா் சங்கா் ஆகியோரையும் தாக்கிவிட்டுத் தப்பினா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.