கட்டட ஒப்பந்ததாரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு
போடி அருகே கட்டட ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகே கட்டட ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள செந்தலை வயல் பகுதியைச் சோ்ந்தவா் அஜிஸ்கான் (32). கட்டட ஒப்பந்ததாரரான இவா், தேனி மாவட்டம் சிலமலை அருகேயுள்ள மல்லிங்காபுரம் பகுதியில் தமிழ்கருப்பசாமிக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கி வேலி போட்டுள்ளாா்.
இந்த நிலத்துக்கு மீதிப் பணம் தரவேண்டும் என தமிழ்கருப்பசாமி பிரச்னை செய்ததால், அஜிஸ்கான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த நிலையில், தமிழ்கருப்பசாமி, இவரது தாயாா் பொன்னுத்தாய், உறவினா்கள் தாயம்மாள், பாலகிருஷ்ணன், இவரது மனைவி ஜோதி ஆகியோா் சோ்ந்து அஜிஸ்கானை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் தமிழ்கருப்பசாமி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.