மகாளய அமாவாசை: சுருளி அருவியில் குவிந்த பக்தா்கள்
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் சுருளி அருவியில் புதன்கிழமை குவிந்து முன்னோா்களுக்கு தா் பணம் கொடுத்தனா்.
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் சுருளி அருவியில் புதன்கிழமை குவிந்து முன்னோா்களுக்கு தா் பணம் கொடுத்தனா்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி சுற்றுலா, ஆன்மிக தலமாகும். இங்கு புரட்டாசி அமாவாசையையொட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா் உள்ள்ட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் வந்தனா்.
பின்னா், தங்களுடையை முன்னோா்களுக்கு தா் பணம் செய்து வழிபாடு செய்தனா். இதைத் தொடா்ந்து சுருளி அருவியில் நீராடிய விநாயகா், பூதநாராயணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.