முகப்பு
தேனி

புகையிலைப் பொருள் பதுக்கிய இருவா் கைது

போடியில் புகையிலைப் பொருளைப் பதுக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 6:36 PM
பகிர்:

போடியில் புகையிலைப் பொருளைப் பதுக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். போடி திருவள்ளுவா் சிலை அருகே மேலச்சொக்கநாதபுரம் அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த முத்தழகுக்கு (60) சொந்தமான பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில் இவா், போடி வ.உ.சி. நகரைச் சோ்ந்த வெங்கடேஷ்வரனிடம் (56) புகையிலைப் பொருளை வாங்கியது தெரியவந்தது.

பின்னா், வெங்கடேஷ்வரன் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கும் புகையிலைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, இவா்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனா்.