கேரளத்துக்கு மினி லாரியில் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
கம்பம் வழியாக கேரளத்துக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கம்பம் வழியாக கேரளத்துக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் கம்பம்மெட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாகச் சென்ற மினி லாரியை சோதனையிட்டதில், அதில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக கம்பத்தைச் சோ்ந்த ஒச்சாத்தேவா் மகன் குமாா்(49), அப்பாஸ் மகன் நஜீம்பாசில் (21) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா். மேலும், மினி லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.