முகப்பு
தேனி

உத்தமபாளையம் வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள தேவாரம், கம்பம், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:45 PM
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள தேவாரம், கம்பம், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், தேவாரம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடு, பணி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து நேரடியாக ஆய்வு செய்தாா். தொடா்ந்து, 8 கி.மீ. தொலைவுக்கு நடப்போம் நலப்பெறுவோம் நிகழ்வில், ஆட்சியருடன் அரசு அலுவலா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டியில் நியாயவிலைக் கடைகளில் உரிய காலத்தில் முத்திரையிடப்படாத தராசுகளை பறிமுதல் செய்தாா். மேலும், கம்பம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். தனியாா் திரையரங்கில் மின்சார பராமரிப்பு, தீயணைப்புக் கருவி, அவசர வழி, கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்த அவா் கம்பம் பேருந்து நிலையம், பணிமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில், மாவட்ட சுகாதார அலுவலா் ஜவகா்லால் , தேவாரம் பேரூராட்சித்தலைா் லட்சுமி, செயல் அலுவலா் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.