தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் அருகேயுள்ள தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் தேனி சாா் பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் பிற்பகல் 2.30 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனா். அலுவலகத்திலிருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு, அலுவலகக் கதவை மூடிக் கொண்டு சோதனை நடைபெற்றது. இரவு 8.30 மணி வரை சோதனை நடைபெற்றது.
இதில், கணக்கில் வராத ரூ.43 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.