ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா் உண்ணாவிரதம்
தேனியில் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சாா்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தி, வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேனியில் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சாா்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தி, வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் பிரசாத்குமாா், மாநில ஒருங்கிணைப்பாளா் முத்துராமலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் உடையாளி, செயலா் சென்னமராஜ், மாநில துணைத் தலைவா் முகமது அலி ஜின்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில அரசு தோ்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.