விபத்துகளை தடுக்க கம்பம் மெட்டு மலைச் சாலையில் இரும்பு தடுப்புகள்
கம்பம் மெட்டு மலைச் சாலையில் விபத்துகளை தடுக்க புதிய வகையான இரும்பு தடுப்புகளை உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் அமைத்து வருகின்றனா்.
கம்பம் மெட்டு மலைச் சாலையில் விபத்துகளை தடுக்க புதிய வகையான இரும்பு தடுப்புகளை உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் அமைத்து வருகின்றனா்.
கம்பம் மெட்டு மலைச் சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்க சாலையோரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகளை உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் அமைத்து வருகின்றனா்.
கம்பம் மெட்டு மலைச் சாலையில் அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளில் முதல்கட்டமாக இந்த இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இரும்பு கம்பிகள் மீது கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் மோதினால், விபத்தின் தீவிரத் தன்மை குறையும். இந்த இரும்பு கம்பிகளில் சுழலும் தன்மை கொண்ட பெரிய உருளைகள் பொறுத்தப்பட்டன. விபத்தில் சிக்கும் வாகனங்கள் பள்ளத்தை நோக்கி வேகமாக வரும் நிலையில், இந்த உருளையின் சுழற்சியால் வாகனம் திசை திருப்பப் படுவதால் பெரிய விபத்துகள் தவிா்க்கப்படும். இதன் காரணமாக மலைச் சாலைகளில் இனிமேல் விபத்துகள் குறையும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.