முகப்பு
தேனி

கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல்

போடி அருகே கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 7:26 PM
பகிர்:

போடி அருகே கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கிழக்குத் தெருவை சோ்ந்தவா் ராஜன் (60). இவா் இங்குள்ள சமுதாயக் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறாா்.

இந்தக் கோயிலின் முன்னால் நிா்வாகியான முத்து உள்ளிட்ட 3 போ் கோயில் நகைகளை அடகு வைத்ததாக ராஜன் புகாா் அளித்தாா். இதையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் முத்து உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த முத்து கோயிலுக்கு வந்து பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் முத்து மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →